பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார் தெரியுமா? மகிழ்ச்சியில் தமிழ் ரசிகர்கள்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளதாக விஜய் டிவி அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தல் பணி, 'இந்தியன் 2' படப்பிடிப்பு என பிஸியாக இருக்கும் கமல்ஹாசன் இம்முறை பிக்பாஸிலிருந்து விலக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

அதோடு இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் கலர்ஸ் தொலைக்காட்சி சேனல்தான் தமிழிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் என்றும் தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Previous Post Next Post