மாலை 6 மணி வரை மேலதிக போக்குவரத்து சேவை

ஊரடங்கு சட்டத்திற்கு முன்னர் கொழும்பு, கோட்டையில் இருந்து மேலதிக ரயில்கள் மற்றும் பேருந்துகள் அவசர தேவையின் பொருட்டு இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

திங்கட்கிழமை (23) காலை 6.00 மணி முதல் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை கூறியுள்ளது.
Previous Post Next Post