இலங்கையில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் - ஆபத்தான நிலையில் 8 நோயாளிகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 8 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த 8 பேரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

8 பேரில் 7 பேர் கொழும்பு IDH வைத்தியசாலையிலும் ஒருவர் வெலிகந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 106ஆகும். அவர்களில் 7 பேர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

வைரஸ் தொற்றிற்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் நோயாளரகளின் எண்ணிக்கை 238ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் இலங்கையில் எந்தவொரு கொரோனா நோயாளர்களும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதாரதுறை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post