இலங்கையில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 86 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 5 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

இன்று காலை 5 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மொத்த எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்று சந்தேகத்தில் 15 வைத்தியசாலைகளில் 222 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
Previous Post Next Post