நோய் எதிர்ப்பு சக்தி தரும் எலுமிச்சைபழம்…!

இயற்கை நமக்கு கொடுத்துள்ள கொடையில் எலுமிச்சையும் ஒன்று. எலுமிச்சை பழம். உடலில் அமிலப் பண்புகள் அதிகரிக்கும் போது நமக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள், இந்த உடல் நலக் குறைவைத் தகர்த்து விடுகிறது.

நம் உடலில் செரிமானம் மட்டும் ஒழுங்காக இல்லையென்றால், அது பலவிதமான உபாதைகளில் கொண்டு போய் விட்டு விடும். எலுமிச்சை ஜூஸை சாப்பிடும் போது, அது உடலில் உள்ள அனைத்து அழுக்குகளையும் அடித்து இழுத்துக் கொண்டு வருவதால், செரிமானப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும்.

எலுமிச்சைசாறு உடலுக்கு நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்களின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. வேகமாக வளர்ச்சியடையும் தீங்கு விளைவிக்கும் வைரஸ், பாக்டீரியா ஆகியவற்றை ஊக்குவிக்காமல், உடலுக்கு நன்மை செய்யும்.

எலுமிச்சம் பழம் நீரிலும், காற்றிலும் ஏற்படும் நோய்கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது. தினமும் எலுமிச்சை பழம் சாப்பிடுபவர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கும்போது வரும் கதிரியிக்க அபாயத்தைத் தடுக்கும்.

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. எலுமிச்சைகள் பாலிபீனால்கள், டெர்பீன்கள் மற்றும் டானின்கள் உள்ளிட்ட பல்வேறு தாவர வேதிப்பொருட்களும் எலுமிச்சையில் நிறைந்துள்ளன. மற்ற சிட்ரசு பழங்களைப் போலவே இதிலும் சிட்ரிக் அமிலத்தின் குறிப்பிடத்தக்க செறிவு நிரம்பியுள்ளது.

எலுமிச்சம் பழம் பித்தத்தைப் போக்கும், வாய்ப்புண்ணை ஆற்றும். நல்ல பாக்டீரியாக்களுக்கு சாதகமான, வெப்ப நிலையை பராமரிக்க உதவுகிறது.

  • எலுமிச்சை பழச்சாறை தண்ணீல் சர்க்கரைப் போட்டு ஜூஸ்ஸாக குடிக்கலாம் அல்லது எலுமிச்சை சாதம் செய்து வாரத்திற்கு 3 முறை சாப்பிடலாம்.

  • எலுமிச்சைப் பழச்சாறை இளஞ் சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் வயிறுக்கு மிகவும் நல்லது. வயிற்றுப்பிரச்சினை, குமட்டல், வாந்தி போன்ற சிக்கல்களுக்கெல்லாம் எலுமிச்சைப் பழச்சாறு நன்மையை தருகிறது.

  • எலுமிச்சைப் பழச்சாறு ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அடிக்கடி எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியேறுவதுடன் ரத்தமும் சுத்தமாகிறது.

  • எலுமிச்சைப் பழச்சாறை “லிவர் டானிக்” என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். ஈரலின் செயல்பாட்டை அதிகப்படுத்தி செரிமானத்தை ஆரோக்கியமாக்குவதற்கு எலுமிச்சைப் பழச்சாறு பெரிதும் பயன்படுகின்றன.

  • தினமும் எலுமிச்சைப் பழச்சாறு அருந்துவது தோலைப் பளபளப்பாக்கி உடலுக்கு நல்ல அழகை கொடுக்கின்றது. தோலிலுள்ள சுருக்கங்களை மாற்றி, கரும் புள்ளிகளை மறையச் செய்கின்றது.

  • எலுமிச்சைப் பழச்சாறு உடலை குளிர்ச்சியாக வைக்கின்றது. இதன் மூலம் தோல் எரிச்சல், வெப்ப நோய்கள் தாக்குதல் போன்றவற்றிலிருந்து உடலை பாதுகாக்கின்றது.

  • வாய் துற்நாற்றம் இருந்தாலும், பல்லில் பல பிரச்சினைகள் இருந்தாலும் எலுமிச்சைப் பழச்சாறைக் கொண்டு சுத்தம் செய்யுங்கள். இதன் மூலம் பல் சார்ந்த நோய்கள் குணமாகும்.

  • உடல் எடை இளைக்கவும் எலுமிச்சைப் பழச்சாறு துணை செய்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளம் சூடான தண்ணீரில் எலுமிச்சைச் சாறையும், தேனையும் கலந்து அருந்தி உடல் எடை கணிசமாக குறையும்.

  • காய்ச்சல் சளி போன்ற நோய்களுக்கும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நிவாரணம் தரும்.

Previous Post Next Post