கொரோனா அச்சத்தில் உள்ள மக்களை கலங்கவைத்த யாழ் வங்கி அதிகாரிகள் ! கருணைகாட்டமாட்டீர்களா?

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருக்கும் இந்த நிலையிலும், யாழில் உள்ள சில வங்கிகள் தமது வாடிக்கையாளர்களை உதாசீனம் செய்துள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக கடந்த வெள்ளிமுதல் நாடெங்கும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று சில மாவட்டங்களில் காலை 6 மணியிலிருந்து மதியம் 2 மணி வரைக்கும் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொது மக்கள் தங்களது பணத்தினை எடுப்பதற்கும், நகைகளை அடகு வைப்பதற்கும் வங்கிகளுக்குச் சென்ற போதும் சில வங்கிகள் அவர்களை திருப்பியனுப்பியுள்ளது.

இது தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ள மக்கள் , இக்கட்டான இந்த சூழலில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு தமது கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு வங்கிகள் அனுமதிக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன் நகைகளை அடகு வைத்து உணவுபொருட்களை வாங்கலாம் என தாம் வந்தபோது வங்கிக்குள் தம்மை அனுமதிக்கவில்லை என பெண்ணொருவர் கூறியுள்ளமை பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post