முதன்முறையாக வெளியாகியுள்ள கொரோனா வைரசின் படம்!

பிரான்சின் தேசிய சுகாதாரம் மற்றும மருத்துவ ஆராய்ச்சிகளிற்கான நிறுவனமான Inserm (Institut national de la santé et de la recherche médicale) Covid-19 தொற்றுநோய்க்குக் காரணமான SARS-CoV-2 வைரசின் படத்தினை உலகில் முதன்முறையாக வெளியிட்டுள்ளது.

மனிதனின் சுவாசத் தொகுதியைப் பாதிக்கும் இந்த வைரசின் படத்தினைத் தனிமைப்படுத்தபட்டு ஒரு கொரோனா நோயளியிடமிருந்து பெற்றுள்ளனர். இந்தத் தகவலை Inserm தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 
Previous Post Next Post