ரணிலிடம் இருந்து வந்த பேரிடியான செய்தி! வெளியேறும் பலர்

யானை சின்னம் வழங்காவிடின் சமகி ஜன பலவேகய பொருத்தமான சின்னத்தில் போட்டிட நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

செயற்குழு கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


என்றாவது ஒருநாள் யானையின் உரிமையை பெற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் அனைவரும் கூட்டணிக்கு சேர்ப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், சிலர் அதை நாசப்படுத்த முயற்சிப்பதாகவும் கபீர் ஹஷிம் தெரிவித்துள்ளார்.

நாடு கேட்பது சஜித் பிரேமதாசவை எனவும் யானை சொந்தம் UNP வாக்காளர்களுக்கு என்பதால் வாக்களிக்கும் வகையில் யானை இருக்க வேண்டிய இடத்தை வாக்காளர்களே முடிவு செய்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு தேவைப்படுவது தற்போதைய அரசாங்கத்தின் தேவைக்கேற்ப செயற்படுவது என பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவதுவல தெரிவித்துள்ளார்.

தற்போது கட்சியின் ஒற்றுமை குறித்து எதிர்பார்ப்பு இல்லாமல் போய்விட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல குறிப்பிட்டுள்ளார்.

சமகி ஜன பலவேகாயவின் ஆரம்ப நிகழ்வு இன்று (02) நெலும் பொகுன அரங்கில் நடைபெறும் என்று சஜித் தரப்பு வலியுறுத்தியுள்ளது.
Previous Post Next Post