தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார் சங்கக்காரா!

வேகமாக கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

கடந்தவாரம் பிரித்தானியா சென்றுவந்த அவர், தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் தடுத்து வைக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையையடுத்து தான் தனிமைப்பட்டு இருப்பதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இது நாட்டுக்காகவும், நமது மக்களுக்காகவும் உறவுகளுக்காகவும் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, அவருக்கான பரிசோதனையும் மேற்கொள்ளப்படுபவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post