பிரான்சில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா

பிரான்சில் இருந்துவரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கொரோனா வைரஸ் அங்கே வேகமாக பரவிவருகிறது. 100 க்கும் மேற்பட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. லூவர் அருங்காட்சியகமும் மூடப்பட்டுள்ளது.

பரிசுக்கு மிக அருகில் இருக்கும் Montreuil நகரில் தந்தை ஒருவருக்கும் அவரது மகளுக்கும் இந்த வைரஸ் தொற்றியுள்ளது.இதுவரை 130 க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் சாவடைந்துள்ளார்கள்.

அனைத்து பிரெஞ்சு ஊடகங்களிலும் தற்போது கொரோனா பற்றிய செய்திகளே இடம்பிடிக்கின்றன. போதியளவு விழிப்புணர்வை அவை ஏற்படுத்துகின்றன. இருப்பினும் கோரோனா வேகமாக பரவிவருகிறது.

அனைவரும் எச்சரிக்கையாக இருப்போம்.
Previous Post Next Post