சுவிஸில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத் தமிழர்

சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி யாழ். தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இதில் புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயதுடைய லோகநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவிஸ் செங்காளன் ஜோனா எனும் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் இவர் தங்கியிருந்துள்ளார்.

இவர் ஒரு வாரத்திற்கு முன்னர் தான் சூரிச் நகருக்குச் சென்று திரும்பியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து இவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதை அடுத்து வைத்தியசாலையில் இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் அவரை 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் தனது அறையில் தனிமையில் இருந்துள்ளார். எனினும் நேற்று மாலை வரை எந்த சத்தமும் இல்லாத நிலையில் பொலிஸாருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

விரைந்து வந்த பொலிஸார் அவர் இறந்து விட்டார் என தெரிவித்து அவரின் உடலை எடுத்துச் சென்றுள்ளனர் என அந்த பத்திரிகையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post