ஊரடங்கு உத்தரவு!... வலியில் துடிதுடித்த மகள்- தந்தையே பிரசவம் பார்த்த நெகிழ்ச்சி சம்பவம்

கேரளாவில் சுய ஊரடங்கு உத்தரவால் முடங்கிய நிலையில் நிறைமாத கர்ப்பிணி மகளுக்கு அவரது தந்தையே பிரசவம் பார்த்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவில் கொரோனா வைரஸ் 56 பேரை தாக்கியுள்ளது. பலர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

கேரள மாநிலமே முடங்கியுள்ள நிலையில் நேற்று பிரதமர் சுய ஊரடங்கை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனையடுத்து கேரளா முழுவதும் வெறிச்சோடியது.

இந்நிலையில் பாலக்காட்டின் முதலமடை சுள்ளியார் டேம் பகுதியை சேர்ந்த தேவி என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

இவருக்கு வருகிற 29ம் திகதி குழந்தை பிறக்கலாம் என மருத்துவர்கள் கணித்திருந்தனர், ஆனால் நேற்றே பிரசவ வலி ஏற்பட்டால், ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளார் தேவியின் தந்தை.

ஆம்புலன்ஸ் வந்து மருத்துவமனை செல்லும் வழியிலேயே பிரசவ வலி அதிகரித்ததால் தந்தையே மகளுக்கு பிரசவம் பார்த்துள்ளார்.

குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியை அகற்றாமல் தாயின் மார்பில் அணைத்தபடியே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தாயும், சேயும் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Previous Post Next Post