அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயல்!

முதல் நாளே ஜனாதிபதியின் உத்தரவை மீறிய இலங்கை வங்கி முகாமையாளர். கடன்களை அறவிடுவது தொடர்பில் மத்திய வங்கிக்கு வழங்கப்பட்ட எத்தரவு

அராலி மேற்கு வட்டுக்கோட்டை (J/160) பகுதியில் வசிக்கும் மயூரன் நிசாந்தினி, இவர்கள் நேற்றைய தினம் இலங்கை வங்கி வட்டுக்கோட்டை கிளையில் உறவினர் ஒருவர் அனுப்பிய ரூபாய் 2000 இனை பெறுவதற்கு சென்றிருந்தனர்.

இவர்கள் கடந்த ஆண்டு ரூபா 1 லட்சத்தினை கடனாக பெற்றிருந்தனர். இந்த தொகையினை காலம் தவறாது கடந்த மாதம் வரையிலும் சரியாக மீள செலுத்தி வந்துள்ளனர்.இந்த மாதம் வீட்டு வறுமை காரணமாக உறவினர் வழங்கிய 2000 ரூபா பணத்தினை பெறுவதற்கு வங்கிக்கு சென்ற போது அதனை வழங்க மறுத்துவிட்டார்.

கணவர் கடற்தொழில் செய்பவர். இவ்வாறான நிலையில் ஜனாதிபதி மக்களின் நன்மை கருதி வழங்கிய உத்தரவை மீறிய வங்கி அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நிசாந்தினியின் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post