ஸ்ரீலங்காவில் இன்று மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று நோயாளர்கள்!

இரண்டாம் இணைப்பு

ஸ்ரீலங்காவில் சற்று முன்னர் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளான மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவரக்ளின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.

முதலாம் இணைப்பு

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளான மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஸ்ரீலங்காவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்காவில் ஏற்கனவே 102 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் சற்று முன்னர் மேலும் இருவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவரக்ளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.
Previous Post Next Post