ப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல் இது தான், ரசிகர்கள் கவலை

ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை. இன்னும் சில தினங்களில் இவர் நயன்தாரா, த்ரிஷா போல் முன்னணி நடிகையாக வந்தாலும் ஆச்சரியமில்லை.

அந்த வகையில் ப்ரியா ஆரம்பத்தில் செய்தி தொகுப்பாளரக தான் தன் கெரியரை தொடங்கினார், அதிலிருந்து சின்னத்திரை வந்தார், இதில் இவர் நடித்த சீரியல் செம்ம ஹிட் அடித்தது.

தொகுப்பாளராகவும் சில ஷோக்கள் தொகுத்து வழங்கி வர, மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவின் எண்ட்ரீ கொடுத்தார் ப்ரியா.

இதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்தார், இந்த மூன்று படங்களுமே ஹிட் அடித்த்து.

பிறகு சமீபத்தில் வந்த மாஃபியா படத்திலும் இவர் நடித்திருந்தார், இப்படத்தில் இவர் போலிஸ் அதிகாரியாக நடித்தார்.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் தோல்வியை தழுவ, ப்ரியாவின் முதல் தோல்வி படம் சினிமாவில் இது தான், இவை ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

ப்ரியா கையில் தற்போது பொம்மை, குருதி ஆட்டம், இந்தியன் 2 என நம்பிக்கை தரும் படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post