குறைகிறதா கொரோனா எண்ணிக்கை... நம்பிக்கையின் கீற்றை உருவாக்கியுள்ள இத்தாலி!

இத்தாலி பிற நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டபிறகு அதன் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளதால், தனிமைப்படுத்தல் அல்லது நாடு ஒன்று மூடப்படுதல் நல்ல பலனைக் கொடுக்கும் என்ற ஒரு சிறு நம்பிக்கை உருவாகத் தொடங்கியுள்ளது.

உலகிலேயே இன்னமும் இத்தாலிதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக கருதப்படுகிறது.

இத்தாலியில், சுமார் 60,000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, 5,500 பேர் உயிரையும் இழந்துள்ளனர்.

ஆனால், மொத்த நாடும் பிற நாடுகளில் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு மூடப்பட்டதைத் தொடர்ந்து, இறப்பு வீதமும், புதிதாக நோய்த்தொற்று ஏற்படுவதும் சனிக்கிழமைக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் இடையில் குறையத்தொடங்கியுள்ளதால் கொரோனாவின் தாக்கம் வீழ்ச்சியடையும் என்ற ஒரு சிறு நம்பிக்கை உருவாகியுள்ளது.

ரோமிலுள்ள அதிகாரிகள், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 651 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாகவும், ஆனால் நேற்று முன்தினம், அதாவது ஞாயிற்றுக்கிழமை பலியானோர் எண்ணிக்கை 793 ஆக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமைக்கும் சனிக்கிழமைக்கும் இடையில் 6,557 ஆக இருந்தது, சனிக்கிழமைக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் இடையில் 5,560 ஆக குறைந்துள்ளது.

இன்னமும் கொரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை ஆயிரங்களில் இருந்தாலும் கூட, அவை நாளுக்கு நாள் சற்றேனும் குறைவது கூட இத்தாலியில் நம்பிக்கையை அளிப்பதாக கருதப்படுகிறது.
Previous Post Next Post