கொரோனா நோயாளிகள் அனைவரிடமும் நான் அந்த அறிகுறியைப் பார்த்தேன்: நர்ஸ் கூறும் மற்றொரு அறிகுறி!

கொரோனா நோயாளிகள் பலருக்கு சிகிச்சையளித்த நர்ஸ் ஒருவர், வழக்கமாக கொரோனா நோயாளிகளுக்கு காணப்படும் அறிகுறிகள் தவிர்த்து, தான் மற்றொரு அறிகுறியை கவனித்ததாக தெரிவித்துள்ளார்.

இதுவரை காய்ச்சல், மூச்சுத்திணறல், இருமல் முதலானவை கொரோனாவின் அறிகுறிகளாக கூறப்பட்ட நிலையில், அவை தவிர்த்து வேறு சில அறிகுறிகளையும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்போர் கண்டுள்ளனர்.

தற்போது, அமெரிக்காவின் Seattleஇலுள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகள் பலருக்கு சிகிச்சையளித்தவரான Chelsey Earnest என்னும் நர்ஸ், தான் புதிதாக ஒரு அறிகுறியை கொரோனா நோயாளிகளிடம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அது கண்களைச் சுற்றிலும் சிவந்த நிறம் தோன்றுதல் ஆகும்.

தான் சிகிச்சையளித்த அத்தனை நோயாளிகளுக்கும் இந்த அறிகுறி இருந்ததாக தெரிவிக்கிறார் Chelsey.

Previous Post Next Post