யாழில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளியின் தற்போதைய நிலை என்ன?

யாழில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுடையவரின் உடல் ஆரோக்கியம் சாதாரணமாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில், இலங்கையிலும் 100க்கும் மேற்பட்டவர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக அண்மையில் யாழ்ப்பாணத்திலும், இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

அவர் தற்போது சிகிச்சைகளுக்காக கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ள நிலையில், அவரின் தற்போதைய நிலை குறித்து யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் இவ்வாறு கூறியுள்ளார்.
Previous Post Next Post