மனைவி உயிருக்கு போராடும் நிலையிலும் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பாராட்டத்தக்க செயல்

மனைவி உயிருக்கு போராடும் நிலையிலும், கொரோனா வைரஸ் பாதிப்புகளில் இருந்து கனடா மக்களை காப்பாற்ற அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

ஒட்டுமொத்த உலகமும் இன்று ஒரு சேர உச்சரித்து வரும் ஒரு பெயர் கொரோனா வைரஸ் (Coronavirus).

கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த கோவிட்-19 (Covid-19) என பெயர் சூட்டப்பட்டுள்ள வைரஸ், வல்லரசு நாடுகளையே தற்போது கலங்கடித்து வருகிறது.

கோவிட்-19 வைரஸ் தாக்கியதால், உலகம் முழுவதும் தற்போது வரை 11,431 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற உலக நாடுகளை போலவே, கோவிட்-19 வைரஸால் கனடாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் 900க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவியே கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

எனவே ஒட்டாவா நகரில் உள்ள தனது வீட்டில் ஜஸ்டின் ட்ரூடோவும் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

மனைவி பாதிக்கப்பட்டுள்ள இக்கட்டான நிலையிலும் கூட, கோவிட்-19 வைரஸை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் பற்றியே ஜஸ்டின் ட்ரூடோ சிந்தித்து கொண்டுள்ளார்.

இது குறித்து ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில்,

கனடாவில் இருக்கும் வாகன தொழிற்சாலைகள் இனி மருத்துவ உபகரணங்களை தயாரிக்கவுள்ளன.

கோவிட்-19 வைரஸை எதிர்ப்பதற்கான மருத்துவ உபகரணங்களை கனடாவில் இயங்கி வரும் வாகன தொழிற்சாலைகளில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

''மருத்துவ பணியாளர்களுக்கு நமது ஆதரவு தேவைப்படுகிறது. எனவே வாகன பாகங்களில் இருந்து தங்கள் உற்பத்தியை மருத்துவ உபகரணங்களுக்கு மாற்றிக் கொள்ளும் நிறுவனங்களுக்கு கனடா அரசு உதவி செய்யும்'' என்றார்.
Previous Post Next Post