ஆண்களிடம் மதுபானம் அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்கள் அதிகளவில் இருப்பதனால் கொரோனா வைரஸ் ஆண்களை அதிகம் தாக்குவதாக சர்வதேச அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பான ஆய்வுகளை சர்வதேசத்தின் பல நிறுவனங்களும், அமைப்புக்களும் மேற்கொண்டுவருகின்றன.
இந்நிலையில், இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களில் 60 வீதமானவர்கள் ஆண்கள் என்பதுடன், இறந்தவர்களில் 70 வீதமானவர்களும் ஆண்கள் எனவும் தெரியவந்துள்ளது.
குறித்த ஆய்வின் முடிவுகளின்படி, பெண்களை விட ஆண்கள் மதுபானம் அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்கள் தான் இதற்கு காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா பாதிப்பு உள்ளான அமெரிக்கர்கள் அதனை மறைப்பதாக அமெரிக்காவின் சீ.என்.என் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இதனால், காணப்படும் நிலைமை குறித்து உலகளாவிய ரீதியாக புரிந்துக்கொள்ள முடியாமல் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பல உலக நாடுகள் கொரோனா வைரஸ் காரணமாக அரை குறையாகவும் முழுமையாகவும் முடக்கப்பட்டுள்ள நிலையிலும் இவை அனைத்துக்கு சவால் விடுத்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
இந்த வைரஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இன்னும் குறிப்பிடத்தக்க காலம் செல்லும் எனவும் நபர்கள் முடிந்தவரை ஒருவருக்கு ஒருவர் இடையிலான இடைவெளிகளை பேண வேண்டியது முக்கியமானது என சுகாதார அதிகாரிகள் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த வைரஸ் தாக்கத்தினால் இலங்கையும், இந்தியாவும் முழுமையாக தமது நாடுகளை முடக்கியிருக்கின்றன. இலங்கையில் தற்போது வரை 102 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில் 3 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.