கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படுமா? சீனாவிலிருந்து வரும் நல்ல செய்தி

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் இரத்தத்தில் இருந்து மருந்து கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்ற சிகிச்சை நடைமுறையை, சீன மருத்துவர்கள் கையில் எடுத்துள்ளனர். இதை சோதித்து பார்க்க அமெரிக்க மருத்துவர்களும், அந்த நாட்டு நாட்டு மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இது மிகப் பழங்காலம் நடைமுறைதான் என்றும், பல்வேறு தொற்று நோய்களுக்கு சிகிச்சை தர இந்தமுறை வெகுவாக பயன்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள் வோஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவர்கள்.

இந்த முறையில், கொரோனாவை குணப்படுத்த எந்த அளவுக்கு சாத்தியம் என்பது பரிசோதனைகளுக்குப் பின் தெரியும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட கிருமியால் பாதிக்கப்படுகையில், உடல் அந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராட அன்டிபாடிகள் எனப்படும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புரதங்களை உருவாக்கத் தொடங்குகிறது. அந்த நபர் குணமடைந்த பிறகு, அந்த அன்டிபாடிகள் உயிர் பிழைத்தவர்களின் இரத்தத்தில் மிதக்கின்றன. குறிப்பாக பிளாஸ்மா எனப்படும் இரத்தத்தின் திரவ பகுதியில் பல மாதங்கள், சில நேரங்களில் பல ஆண்டுகள் கூட உயிர் வாழ்கின்றன.

புதிதாக நோய்வாய்ப்பட்ட COVID-19 நோயாளிகளுக்கு ஏற்கனவே, உயிர் பிழைத்தவர்களின் அன்டிபாடி நிறைந்த பிளாஸ்மாவை உட்செலுத்தி சிகிச்சை வழங்கினால் கொரோனா குணமடையுமா என்ற ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன
Previous Post Next Post