தனது சுவாசக் கருவியை இளம் நோயாளிக்கு தானமாக வழங்கி உயிரை விட்ட பாதிரியார்: இத்தாலியில் சம்பவம்

இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சுவாசக்கருவி மூலம் சிகிச்சை பெற்று வந்த பாதிரியார் ஒருவர் இளம் நோயாளி ஒருவருக்கு அதை தானமாக வழங்கி மரணத்தைத் தழுவியுள்ளார்.

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மோசமான சூழல் இருந்துவரும் லோம்பார்டி பகுதியிலேயே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

இப்பகுதியில் உள்ள Casigno என்ற கிராமத்தில் சேவையாற்றி வந்த 72 வயது பாதிரியார் Giuseppe Berardelli என்பவரே பொதுமக்களால் தமக்கு வழங்கப்பட்ட சுவாசக்கருவிகளை இளம் கொரோனா நோயாளி ஒருவருக்கு தானமாக வழங்கியவர்.

தானமாக பெற்ற அந்த இளம் நோயாளிக்கும் குறித்த பாதிரியாருக்கும் இதுவரை எந்த அறிமுகமும் இல்லை என கூறப்படுகிறது.ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அந்த நபர் மூச்சுவிட கடுமையாக போராடி வருவதை காண நேர்ந்த பாதிரியார், தமது கருவிகளை அந்த நபருக்கு தானமாக வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாதிரியார் Giuseppe Berardelli மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலியில் இதுவரை சுமார் 60 பாதிரியார்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்காகி மரணமடைந்துள்ளனர்.

இக்கட்டான சூழலில் நாம் பொதுமக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என பாப்பரசர் பிரான்சிஸ் அறிவித்ததை அடுத்து பல பாதிரியார்கள் கொரோனா பாதித்த பொதுமக்களை சந்திக்க சென்றுள்ளனர்.
Previous Post Next Post