வீட்டுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர்! சிக்கிய உருக்கமான கடிதம்

இந்தியாவில் மனைவி மற்றும் மகன்களை கொன்று பொறியாளர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் பிரதீப்குமார் (36). பொறியாளரரான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு சுவாதி (28) என்ற மனைவியும், 6 வயது மற்றும் 1½ வயதில் 2 மகன்களும் உள்ளனர். பிரதீப்குமார் சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

இதற்காக சிலரிடம் வட்டிக்கு கடன் வங்கினார். ஆனால் நிறுவனம் தொடங்கும் அவரது முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதனால் அவர் வாங்கிய ரூ.22 லட்சம் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததால் அவர் மனவேதனை அடைந்தார்.கடந்த சனிக்கிழமை அவர் குடும்பத்தோடு இறக்க முடிவு செய்துள்ளார். அதன்படி மனைவி மற்றும் 2 மகன்களுக்கும் வி‌ஷம் கொடுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் தானும் வி‌ஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சுவாதியின் பெற்றோர் செல்போனில் பல முறை தொடர்பு கொண்டும் போனை எடுக்காததால் சந்தேம் அடைந்தனர். அவர்கள் வீட்டுக்கு சென்றபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

பொலிசார் மூலம் கதவை உடைத்து உள்ளே சென்றபோது வீட்டுக்குள் 4 பேரும் சடலமாக கிடந்தனர்.சடலங்களை கைப்பற்றிய பொலிசார் பிரதீப்குமார் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தையும் எடுத்தார்கள்.

அதில், நான் சொந்தமாக நிறுவனம் தொடங்க நினைத்தேன். இதனால் கடன் அதிகமாக வாங்கிவிட்டேன். அதை அடைக்க முடியாததால் இந்த முடிவை எடுக்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள் என எழுதப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post