மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு காரணமாக தீவிர தனிமைப்படுத்தலில் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல்!

ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு வைத்தியம் பார்த்துவந்த மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தமது குடியிருப்பில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் சேன்ஸலர் மெர்க்கல்.

ஜேர்மனியில் பொதுவெளியில் இரண்டு பேருக்கு மேல் ஒன்றாக கூட தடை சட்டம் அமுலில் இருந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜேர்மனியில் கடும்போக்கு சட்டங்கள் அமுலில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், ஜேர்மன் சேன்ஸலர் மெர்க்கலுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சமீபத்தில் அவரை சந்தித்து மருத்துவ ஆலோசனைகள் பெற்ற நிலையில் சேன்ஸலர் மெர்க்கல், தமது குடியிருப்பில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த முடிவை சேன்ஸலர் மெர்க்கலே எடுத்துள்ளதாகவும், வரும் நாட்களில் தொடர்ந்து அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும்,

அலுவலக பணிகளை வழக்கம் போல குடியிருப்பில் இருந்தே மேற்கொள்வார் எனவும் அதிகாரிகள் தரப்பு அறிவித்துள்ளது.

65 வயதான மெர்க்கலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய இன்னும் சில பரிசோதனை முடிவுகள் வர உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க, இருவருக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூட தடைவிதிக்கப்பட்டு சில மணி நேரங்களில், சேன்ஸலர் மெர்க்கல் தொடர்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 24,806 பேர் இலக்காகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,442 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை சிகிச்சை பலனின்றி 93 பேர் பலியாகியுள்ள நிலையில், நோய்த்தொற்றின் வீதத்தை குறைப்பதற்கான மிகச் சிறந்த வழி நமது சொந்த நடத்தையே என சேன்ஸலர் மெர்க்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
Previous Post Next Post