குருவால் ஏப்ரல் மாதம் முழுவதும் மேஷ ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்! பதவியில் ஏற்பட போகும் மாற்றம்?

ஏப்ரல் மாதம் சூரியன் மீனம் ராசியில் பாதி நாட்களும், மேஷம் ராசியில் பாதி நாட்களும் ஆக சஞ்சரிப்பார்.

ஏப்ரல் மாதம் சூரியன் உச்சம் பெறும் மாதம். மகரத்தில் செவ்வாய் உச்சம், சனி ஆட்சி, குரு நீசபங்க ராஜயோகம், ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சி என கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக உள்ளது.

இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம் ராசிக்காரர்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சந்தோஷங்கள் நிறைந்திருக்கும். பணவருமானமும் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

உலகம் முழுவதும் நோய் தாக்குதல் அதிகமாகி வரும் இந்த சூழ்நிலையில் நவகிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மட்டுமே நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். நோயற்ற வாழ்வுதான் குறைவற்ற செல்வம். பண வருமானம் வந்தாலும் ஆரோக்கியமாக இருந்தால்தான் அனுபவிக்க முடியும்.

ஏப்ரல் மாதம் கிரகங்கள் மாற்றத்தை பார்த்தால் ஏப்ரல் 8ஆம் புதன் மீனம் ராசியில் நீசமடைகிறார். 14ஆம் தேதி சூரியன் மேஷத்தில் உச்சமடைகிறார். 24ஆம் தேதி புதன் மேஷம் ராசிக்கு வந்து புதனோடு இணைகிறார். நவ கிரகங்களின் சஞ்சாரம் நன்மை தரக்கூடியதாகவே இருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் மேஷம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

சூரியன் உச்சம்
சூரியன் உங்க ராசிக்கு 12 ஆம் வீட்டிலும் மாத பிற்பகுதியில் உங்க ராசியிலும் உச்சமடையப்போகிறார். 2ஆம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்று இருப்பார். மூன்றாம் வீட்டில் ராகு, ஒன்பதாம் வீட்டில் கேது, பத்தாம் வீட்டில் குரு, சனி, செவ்வாய், 12ஆம் வீட்டில் புதன் என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது. இது அதிர்ஷ்டமான மாதம். உங்க வேலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்க ஆரோக்கியம் நன்றாக இருக்கும்சூரியன் உங்க ராசியில் உச்சமடையப்போவதால் கண்களிலும் உடம்பிலும் உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரலாம் கவனம் தேவை. மாத பிற்பகுதியில் சூரியன் உச்சமடைவதால் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். அரசு தேர்வுகளுக்கு அப்ளை பண்ணுங்க.

வருமானம் அதிகம்
குடும்ப வாழ்க்கை குதூகலமாக இருக்கும் காரணம் நிறைய பேர் இப்போ ஒர்க் ப்ரம் ஹோம்தான் வேலை செய்யறீங்க. இனி சில மாதங்கள் நீடிக்கவும் வாய்ப்பு இருக்கு. பத்தாம் வீட்டில் உங்க ராசி நாதன் முழு பலத்தோட உச்சம் பெற்றிருக்கிறார். கூடவே சனி குரு கூட்டணி சேர்ந்திருக்கிறார். வருமானம் அதிகமாகும். புதிய வேலை கிடைக்கும். உச்சம் பெற்ற செவ்வாய் உங்களுக்கு தன்னம்பிக்கை தைரியத்தை அதிகரிப்பார்.

பதவி தரும் குரு
குரு பகவான் பதவியில் மாற்றத்தை தருவார். இடமாற்றம் ஊர் மாற்றத்தை தருவார். குருவின் பார்வை உங்க ராசிக்கு இரண்டு, நான்கு, ஆறாம் வீடுகளின் மீது விழுவதால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். உயர்கல்வி யோகம் வரும். புதிய கலைகளை கற்றுக்கொள்வீர்கள். வண்டி வாகனம் புதிதாக வாங்கலாம். புதிய கடன்கள் வாங்கலாம். நிறைய வருமானம் வருவதால் பழைய கடன்களை அடைப்பீர்கள்.
Previous Post Next Post