வவுனியாவில் ஆவாகுழு அட்டகாசம்.... இளைஞர் ஒருவர் கைது!

வவுனியா- பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன் தாக்குதலுக்குள்ளான வீட்டின் சுவரில் ஆவா குழு என்றும் எழுதப்பட்டுள்ளது.

நேற்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வீட்டு சுவரில் ஆவா 001 என்றும் எழுதியுள்ளனர்.இவ்வாறு சென்றவர்கள் வீட்டில் இருந்தவர்களை கூப்பிட்ட நிலையில் , அவர்கள் அச்சத்தினால் வெளியில் செல்லவில்லை.

இதனையடுத்து கேட் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி விட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பண்டாரிக்குளம் மற்றும் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னடுத்துள்ளனர்.

இதேவேளை விசாரணைகளின் போது மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்த இளைஞன் ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post