இத்தாலிய மருத்துவர்கள் மகிழ்ச்சி!நம்பிக்கை செய்தி

இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 95 வயது மூதாட்டியை மருத்துவர்கள் காப்பபற்றியுள்ளமை அவர்களுக்கு பாரிய நம்பிக்கையளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இத்தாலி நாட்டின் மடோனாவைச் சேர்ந்த ஆல்மா கிளாரா கோசினி(95 வயது) என்ற வயது முதிர்ந்த பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மார்ச் 5ல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்களின் பாரிய விட முயற்சியினால் மிக விரைவிலேயே குணமாகி வீடு திரும்பியுள்ளார்.குறிப்பாக அவர் வைரஸ் தடுப்பு மருந்து எதனையும் எடுத்துக் கொள்ளாமலே கொரானாவிலிருந்து குணமடைந்துள்ளார்.
மருத்துவர்கள் அந்த வயதான பாட்டியைப் பற்றி கூறும்போது,

கொரோனா நோய் தொற்று ஏற்பட்ட 95 வயது ஆல்மா கிளாராவின் உடல், கொரோனாவிற்கு சிறந்த நோய் எதிர்வினையாற்றியது. இது எங்களுக்கு மிகவும் நம்பிக்கையளிப்பதாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
Previous Post Next Post