தேவதையாக இருந்த லொஸ்லியாவை கவினுடன் சேர்த்து வைத்த ரசிகர்கள்... திருமணத்தைக் குறித்து கேட்ட கேள்வி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் ஜோடியாக வெளியேறியவர்கள் கவின் மற்றும் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா.

நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய பின்பு இவர்கள் காதலைக் குறித்து தற்போது வரை ஒன்று வாய்திறக்கவில்லை. இந்நிலையில் லொஸ்லியா சில போட்டோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றார்.அதே போன்று நேற்றைய தினத்தில் லொஸ்லியா வெள்ளைய நிற உடையில் தேவதை போன்ற காட்சியளித்தார்.

இப்புகைப்படத்தினை தீயாய் பரப்பி வந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் லொஸ்லியாவின் குறித்த புகைப்படத்தினை கவினுடன் இணைத்து போட்டோ ஷாப் செய்துள்ளனர்.

இவ்வாறான புகைப்படத்தினை வெளியிட்டு எப்போது ஒருவரையொருவர் திருமணம் செய்யப்போகிறீர்கள்? என்ற கேள்வியினை எழுப்பி வருகின்றனர்.

Previous Post Next Post