இலங்கை அரசின் அறிவிப்பை அடுத்து! நகை அடகு பிடிக்கும் கடையில் முட்டி மோதிய மக்கள்

மக்களின் அடமானப் பொருட்களுக்கான வட்டி வீதத்தைக் குறைக்க அரசங்கத்தினால் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அத்துடன் நாடு கொரோனா அச்சத்தில் உள்ளதால் மக்களின் கடன்கள் 6 மாதகாலத்திற்கு அறவிடப்படமட்டாது என ஜனாதிபதி கோட்டாபய அண்மையில் அறிவித்திருந்தார்.

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் நேற்று மாலை நடை முறைப்படுத்தப் படுவது தொடர்பில் நேற்று காலை அரசு அறிவிப்பு விடுத்ததை அடுத்து நகை அடகு பிடிக்கும் கடையில் முட்டி மோதியவாறு மக்கள் கூட்டம் சென்றமை சமூக வலைத் தளங்களில் பரவுகின்றமை குறிப்பிடத் தக்கது.

மக்களிடம் பணத் தட்டுப்பாடு உள்ளமையே இதற்கு பிரதான காரணம் எனவும் மேலும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனைர்.
Previous Post Next Post