12 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் சாத்தியம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்படாத 12 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம், எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின்னர் நீக்கப்படும் சாத்தியம் இருப்பதாக அறியமுடிகிறது.

அத்துடன் அது தொடர்பில், அரசாங்கம் கவனம் செலுத்திவருகதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார பிரிவுகளின் பரிந்துரைகளுக்கு அமையவே, இவ்வாறு ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்தன.

ஹம்பாந்துாட்ட, மொனராகல, மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, முல்லைத்தீவு,வவுனியா, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலலேயே புத்தாண்டுக்குப் பின்னர், ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கு கலந்தாலோசிக்கப்படுகிறதாகவும் அறியமுடிகின்றது.

அத்துடன் 12 மாவட்டங்களுக்கு மேலதிகமாக கம்பஹா மாவட்டத்தில் பியகம பிரதேச செயலார் பிரிவு, கொழும்பு மாவட்டத்தில் பாதுக்க மற்றும் சீதாவக்க பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post