150 இராணுவத்தினருக்கு கொரோனா - உடனடியாக மூடப்பட்ட இராணுவ சிறப்புபடை முகாம்..!

நீர்கொழும்பு சீதுவை இராணுவ விசேட படையின் இராணுவ முகாம் பூட்டப்பட்டதுடன் அங்கு பணியாற்றிய 150 இராணுவத்தினர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

குறித்த கப்டனின் மனைவி வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தார்.

இந்நிலையிலேயே இவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தொற்றுடன் இவர் பலருடன் பழகியிருக்கலாம் என்பதால் அதனை பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.


மேலும், கிளிநொச்சி- ஜெயபுரம் பகுதியில் உள்ள இராணுவமுகாம் ஒன்றில் பணியாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் கொரோனா சந்தேகத்தின் பெயரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுராதபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிரு க்கின்றது. இதேவேளை உயிரிழந்த சிப்பாய் அனுராதபுரம் பகுதியை சேர்ந்த 28 வயதானவர் என கூறப்படுகின்றனர். இவருக்கு இம்மாதம் தொடக்கத்தில் விடுமுறையில் வீடு சென்று கடந்த 14 தினங்களிற்கு முன்பே மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். இவ்வாறு பணிக்குத் திரும்பிய சிப்பாய்

முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுக்காலை குறித்த இராணுவச் சிப்பாய் முகாமில் திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட இராணுவச் சிப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சமயம் ஏற்கனவே உயிரிழந்திருந்தமை கண்டறியப்பட்டது. இதனால் குறித்த இராணுவச் சிப்பாயின் உடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இவ்வாறு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் உயிரிழப்பிற்கு கொரோனா காரணமாக எனக் கண்டறியும் நோக்கில் மாதிகரிள் பெறப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு அதன் பெறுபேறுகள் கிடைக்கும் வரையில் உடலம் மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ள நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததா? மரணத்திற்கு கொரோனா காரணமா? என ஆராய்வதற்காக, நேற்று மாலையே உயிரிழந்த சிப்பாயின் இரத்த மாதிரிகள் அனுராதபுரத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பபட்டிருந்தது.குறித்த பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் குறித்த இராணுவ சிப்பாய்கு கொரோனா தொற்றில்லை என இன்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த இராணுவ சிப்பாய்க்கு சிறுநீரகங்கள் செயலழிந்திருப்பதாக கூறப்படுகின்றது.
Previous Post Next Post