இலங்கையில் கடுமையாக அமுலாகும் சட்டம்! 24 மணி நேரத்தில் தீவிர நடவடிக்கை

நாடாளவிய ரீதியில் விசேட நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை மாலை 6 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிவரையிலான 24 மணித்தியாலங்களுக்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடாளவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post