சார்வரி தமிழ் புத்தாண்டில் 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் தேடிவர போகுது தெரியுமா?

சார்வரி தமிழ் புத்தாண்டில் அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள்பாதிப்புகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

அஸ்வினி
பணவரவு நன்றாக இருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். வியாபாரம் விருத்தியடையும். செய்யும் தொழிலில் லாபம் வரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

பரணி
குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போங்கள்.

பணவரவும் செலவும் சரியாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் போது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கார்த்திகை
உங்களுக்கு இந்த ஆண்டு பணவரவு நன்றாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் திருப்தி தரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள்.

ரோகிணி
உங்களின் மனோ தைரியம் அதிகரிக்கும். காரியத்தடைகள் உண்டாகும். தம்பதியர் இடையே நெருக்கம் கூடும்.

அவ்வப்போது சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் பணம் பாக்கிகள் இன்றி வசூலாகும்.

மிருகஷீரிடம்
உங்களின் மனக்கவலை நீங்கும் தெம்பும் தைரியமும் உண்டாகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.

புதிய வாய்ப்புகள் தேடி வரலாம். பிள்ளைகள் மீது அதிக அக்கறை காட்டுவீர்கள். பணவரவு உற்சாகத்தை கொடுக்கும்.

திருவாதிரை
தோல்விகளை வெற்றிகளாக மாற்றும் வல்லமை படைத்தவர்கள் நீங்கள். எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள்.

வியாபாரத்தில் சாதுர்யமான பேச்சினால் லாபம் அடைவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். கணவன் மனைவி இடையே டென்சனும் கோபமும் வேண்டாம் விட்டுக்கொடுத்து போங்க.

புனர்பூசம்
குடும்பத்துடன் குதூகலமாக இருப்பீர்கள். இந்த ஆண்டு இதமான ஆண்டாக அமையும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் ஏற்பட்டு விலகும்.

கொடுத்த கடனை திரும்ப வசூலித்து விடுவீர்கள். இந்த ஆண்டு உங்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும். வேலைச்சுமை சில நேரங்களில் டென்சனை ஏற்படுத்தும்.

பூசம்
வியாபாரம் தொடர்பாக சில அலைச்சல்கள் ஏற்படலாம். திடீர் கோபம் உங்களுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பழைய பாக்கிகள் வசூலாகும். உங்க குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு கெட்ட கனவுகளால் சில பிரச்சினைகள் வரலாம் இறை வழிபாடு மனதில் அமைதியை ஏற்படுத்தும்.

ஆயில்யம்
இந்த ஆண்டு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருப்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும் வீண் செலவு கட்டுப்படும்.

உங்களுக்கு இந்த ஆண்டு வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய கடன்கள் வசூலாகும். வேலையில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும்.

மகம்
உங்களின் மனோ தைரியம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வேலையில் கவனம் தேவை. பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இந்த ஆண்டு சுப காரியங்கள் செய்யும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை செய்வது நல்லது.

பூரம்
பூரம் நட்சத்திரக்காரர்களே நீங்கள் இந்த ஆண்டு எந்த ஒரு விசயத்தையும் கவனமாக கையாளுங்கள். ரகசியம் காக்கவும் எந்த ஒரு விசயத்தையும் வெளிப்படையாக பேச வேண்டாம்.

உறவினர்களால் நன்மை ஏற்படும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியம் கூடும்.

உத்திரம்
இந்த ஆண்டு திடீர் பணவரவு வரும். புதிய நபர்களுடன் எதையும் விவாதிக்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

வேலையில் இருப்பவர்களுக்கு டென்சன் அதிகமாகும். பெண்கள் அடுத்தவர்களின் விசயங்களில் தலையிட வேண்டாம்.

ஹஸ்தம்
இந்த ஆண்டு உங்களின் மதிப்பு மரியாதை கூடும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும்.

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். இந்த ஆண்டு உங்களுக்கு உற்சாகமான ஆண்டாக அமையும். தொழில் வியாபாரம் லாபகரமாக இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும்.

சித்திரை
உங்களின் மனோ தைரியம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து போங்க சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்தாலும் அதை நீங்க பெரிதுபடுத்த வேண்டாம்.

தொழில் வியாபாரத்தில் ஆரம்பத்தில் நஷ்டம் ஏற்படுவது போல இருந்தாலும் இந்த ஆண்டு இறுதியில் வியாபாரம் லாபத்தில் இருக்கும்.

சுவாதி
இந்த ஆண்டு உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்த்து விடுங்கள்.

கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைகள் நீங்கும் வெற்றிகரமான ஆண்டாக அமையும். பிரச்சினைகள் தீரும். பணவரவு அதிகமாக இருக்கும்.

விசாகம்
இந்த ஆண்டு உங்களுக்கு வீண் செலவு அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்கள் கோபப்பட வேண்டாம். மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வேலையை தக்கவைக்கலாம்.

கணவன் மனைவி இடையே கோபமாக பேச வேண்டாம். பெண்களின் மன அமைதி பாதிக்கும். உங்களின் பேச்சுக்கு மதிப்பு மரியாதை கூடும்.

அனுசம்
இந்த ஆண்டு உங்களின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நோய் பாதிப்புகள் நீங்கும். பிரிவினை ஏற்பட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

கேட்டை
இந்த ஆண்டு விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.

தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும்.

மூலம்
வாழ்க்கையில் எதிர்பாராத திடீர் திருப்பங்களை சந்திக்க வேண்டியிருக்கும் , கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

உறவினர்களால் நன்மைகள் நடைபெறும். வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். எந்த செயலையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள்.

பூராடம்
இந்த புத்தாண்டு முதல் நீங்கள் புதிய மனிதராக இருப்பீர்கள். நீங்கள் எண்ணியவை நிறைவேறும். நிறைய நேரங்களில் கோபம் வரும்.

கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பணவரவு இருந்தாலும் காரிய தடைகளால் அவ்வப்போது டென்சன் மன உளைச்சல் ஏற்படும்.

உத்திராடம்
எந்த பிரச்சினை வந்தாலும் சாதுர்யமான பேச்சினால் சமாளிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு வரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.

திருவோணம்
இந்த புத்தாண்டு முதல் உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். நீங்க எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகமாகவே இருக்கும்.

எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அவிட்டம்
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பூசல்கள் சரியாகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. திடீர் செலவுகள் அதிகம் வரும். அமைதியே ஆரோக்கியத்திற்கு வழி.

சதயம்
இந்த சார்வரி ஆண்டில் எந்த புதிய செயலை செய்யத் தொடங்குவதற்கு முன்பும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யவும்.

குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்லவும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். பெண்களுக்கு நகை, பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.

பூரட்டாதி
இந்த வருடம் உங்க பேச்சில் கவனமாக இருங்கள். காரணம் உங்கள் பேச்சே உங்களுக்கு எதிரியாகும். அக்கம் பக்கத்தினர் உறவினர்களிடம் கவனமாக பேசுங்க. குடும்பத்தில் அவ்வப்போது வீண் வாக்குவாதம் ஏற்படும்.

கணவன் மனைவி உறவில் கவனமாக இருங்க. ஏதோ மனக்கவலையுடனே இருப்பீங்க கவனமாக இருங்க கடவுளை நம்பினோரை கைவிட மாட்டார்.

உத்திரட்டாதி
குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசும் போது பேச்சுவார்த்தையில் கவனமாக இருங்க. கணவன் மனைவி இடையே சிறுசிறு மனஸ்தாபம் ஏற்படும்.

சகோதரர்களிடம் பேசும் போது கவனமாக பேசவும். கொடுத்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படும். வேலைப்பளு இருந்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பக்திமயமான ஆண்டாக அமையும்.

ரேவதி
ஆண்டு முழுவதும் குதூகலமாக இருப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும்.

பெண்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பணவரவு அதிகமாகும். மனதில் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய பட்டங்கள் பதவிகள் தேடி வரும்.
Previous Post Next Post