இலங்கையில் மேலும் 30 கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிப்பு

வெலிசர கடற்படை முகாமிலுள்ள மேலும் முப்பது கடற்படை சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை இராணுவ தளபதி சவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.ஜா - எல சுதவெல்ல பிரதேசத்தில் சிலரை தனிமைப்படுத்தலுக்கு அழைத்து சென்ற வெலிசர முகாமிலுள்ள கடற்படை சிப்பாய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, ஏனைய கடற்படையினரிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையை தொடர்ந்து 29 சிப்பாய்களுக்கு குறித்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தமை நேற்றைய தினம் கண்டறியப்பட்டிருந்தது.இவ்வாறான சந்தர்ப்பத்தில் வெலிசர கடற்படை முகாமிலுள்ள கடற்படை சிப்பாய்கள் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post