இந்த 4 ராசி பெண்களை திருமணம் பண்றவன் உலகத்துலயே மிக பெரிய அதிர்ஷ்டசாலியாம்! ஆண்களே உங்களில் யார் அந்த பாக்கியசாலிகள்?

எல்லா ராசிகளுக்கும் நல்ல மற்றும் கெட்ட குணாதிசயங்கள் இருக்கும் வேளையில் சில ராசியினர் மட்டும் ஒரு சிறப்பான மனைவிக்கான குணங்களைப் பெற்றிருப்பார்கள்.

அந்த விதத்தில் நல்ல மனைவிக்கான தகுதியை உடைய ராசிகளை இப்போது இந்த பதிவில் நாம் காணலாம்.

ஆண்கள் இந்த ராசி பெண்களை திருமணம் செய்வதால் வாழ்வில் சிறப்போடு வாழலாம்.

கடகம்


கடக ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு ஒரு நல்ல மனைவிக்கு வேண்டிய சில சிறப்பான குணங்கள் உண்டு. அற்ப குணம் அற்றவர்கள். இயற்கையாகவே மிகவும் அன்பானவர்களாக இருப்பார்கள்.

தனது துணையிடம் சுயநலமற்று இருப்பார்கள். நேர்மை மற்றும் தூய்மையான பண்புகள் இவர்களுடையதாக இருக்கும். மிகவும் உண்மை உள்ளவராக இருப்பார்கள்.

கடக ராசி பெண்கள், தங்கள் கணவரை மிகவும் சந்தோஷமாகவும் மன நிறைவோடும் வைத்துக் கொள்வார்கள் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.

மீனம்

மீன ராசி பெண்கள் மிகவும் நம்பகத்தன்மை மற்றும் விசுவாசம் நிறைந்தவர்கள். இந்த இரண்டு குணங்களும் எந்த ஒரு கணவனும் தன் மனைவியிடம் எதிர்பார்க்கும் முக்கிய அம்சங்களாகும். தன்னை சார்ந்தவர்கள் துயரப்படாமல் இருக்க கடின உழைப்பை இவர்கள் வெளிகாட்டுவார்கள்.

மன்னிக்கும் தன்மை அதிகம் உள்ள மீன ராசி பெண்கள் அனைவருக்கும் இரண்டாம் வாய்ப்பை வழங்க தயாராக இருப்பார்கள்.

இவர்கள் படைப்பாற்றல் மற்றும் புத்திகூர்மை உடையவர்கள். அடிக்கடி மனநிலை மாற்றம் பெறக் கூடியவராக இருந்தாலும், இவர்களின் மற்ற நல்ல குணங்கள் இந்த மனநிலையை மறைத்து விடும். சின்னச் சின்ன விஷயங்களையும் வாழ்வில் இவர்கள் ரசிப்பார்கள். ஒரு அருமையான ஆடவனுக்கு ஒரு சிறப்பான துணையாக இவர்கள் அமைவார்கள்.

துலாம்

துலாம் ராசியைச் சேர்ந்த பெண்கள் வாழ்வில் நல்லிணக்கத்தை விரும்புவதால், எந்த ஒரு பிரச்சனையையும் சரியான முறையில் கையாண்டு அதனை தீர்க்க முயற்சிப்பார்கள்.

வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணின் பின்னால் ஒரு பெண் இருப்பாள், அந்த பெண் பெரும்பாலும் துலாம் ராசியை உடையவளாக இருப்பாள். ஏனென்றால் துலாம் ராசிப் பெண்கள் சிறந்த சிந்தனையாளர்கள், தங்கள் கணவன் வாழ்வில் வெற்றி பெற அவரை ஊக்குவிப்பார்.

இவர்கள் சிறந்த காதல் குணம் கொண்டவராகவும் இருப்பார்கள். இவர்களின் காதல் தான் இவர்களின் வலிமை. தங்கள் கணவரை அதிகம் நேசிப்பார்கள் . வாழ்வில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் விரும்பும் இவர்கள், திருமண பந்தத்தை வெற்றிப் பாதையை நோக்கி இட்டுச் செல்ல மட்டுமே விரும்புகின்றனர்.

கும்பம்


கும்ப ராசிப் பெண்கள் மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். அலுப்பை முற்றிலும் வெறுப்பவர்கள். சில நேரங்களில் தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

அது தவிர, விட்டுக் கொடுக்கும் தன்மை மற்றும் ஈகை குணம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் இவர்களுடன் வாழ்வில் பயணிப்பது மிகவும் இனிமையான தருணமாகும்.

சாமர்த்தியசாலி மற்றும் படைப்பாற்றல் கொண்ட இவர்கள், தன்னை போன்ற வாழ்க்கை துணை வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அறிவை அதிகம் மதிப்பார்கள், தனது மனதுடன் போட்டியிடும் துணையை அதிகம் எதிர்பார்ப்பார்கள்.
Previous Post Next Post