இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 571ஆக உயர்ந்துள்ளதுஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 571ஆக அதிகரிப்பு

முதலாம் இணைப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை மேலும் 34 ஆல் உயர்ந்துள்ளது.

இந்த 34 பேரும் கடற்படை உறுப்பினர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையில் கண்டறியப்பட்ட மொத்த கொரோனா வைரஸ் மொத்த

தொற்றாளிகளின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை இன்று தொற்றில் இருந்து 6 பேர் குணமாகியுள்ள நிலையில் குணமானோரின் எண்ணிக்கை 126ஆக உயர்ந்துள்ளது.
Previous Post Next Post