ராசிகளிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ராசி இது தான்! எக்காரணம் கொண்டும் யாரும் இந்த 5 ராசியையும் நம்பாதீர்கள்? ஏன் தெரியுமா?தற்போது மக்களுக்கு ஜோதிடத்தின் மீது ஆர்வம் அதிகம் எழுந்துள்ளது. இதனால் பலர் தங்களைத் தாங்களே நன்கு புரிந்து கொள்வதற்கு ஜோதிட பாடத்தையே படிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

சில ராசிக்காரர்கள் நம்பத்தக்கவர்களாகவும், இன்னும் சில ராசிக்காரர்கள் நம்பிக்கையற்றவர்களாகவும் இருப்பர். வேண்டுமென்றே யாரும் எதையும் செய்வதில்லை. இவை அனைத்திற்கும் அந்த ராசிகளை ஆளும் கிரகங்கள் தான்.

உங்களது ராசி இந்த பட்டியலில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்

பொதுவாக ரிஷப ராசிக்காரர்கள் வலிமையானவர்கள் மற்றும் எந்த ஒரு விஷயத்திலும் உறுதியானவர்களாக இருப்பர்.

ஆனால் இவர்கள் எல்லாவற்றிற்கும் மேலா எப்போதும் தங்களது சுதந்திரத்திற்கு பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வர்.

ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் நேர்மையற்ற ராசியாக கருதப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் வேண்டுமென்றே கட்டாயத்தின் பேரில் பொய் சொல்லமாட்டார்கள்.

ஆனால் இவர்கள் தங்களது தனியுரிமை மற்றும் சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் ஏதேனும் நடந்தால், அந்த நேரத்தில் பொய் சொல்ல தயக்கம் கொள்ளமாட்டார்கள்.

சிம்மம்

சிம்மம் ராசிகளிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ராசி தான் சிம்மம். இந்த ராசிக்காரர்கள் வலுவான நபர்களாக இருப்பர். இந்த ராசிக்காரர்கள் சுதந்திரமாகவும், தன்னம்பிக்கையுடனும் இருப்பர்.

மேலும் இவர்கள் மிகவும் பாசமிக்கவர்கள். இவர்களது கவர்ச்சிகரமான மனோபாவம், இவர்கள் என்ன சொன்னாலும் அல்லது செய்தாலும் சரியாக இருக்கும் என்று மற்றவர்களை நம்ப கைக்கும்.

மற்றவர்களது இந்த அலாதியான நம்பிக்கை, இவர்களை மற்றவர்களிடம் பொய் சொல்ல வைத்து, பிரச்சனையான சூழ்நிலையில் இருந்து பாதுகாக்கும்

சிம்ம ராசிக்காரர்கள் தாங்கள் விரும்புவது தங்களுக்கு கிடைக்க வேண்டுமென்று நினைப்பவர்கள். தாங்கள் விரும்புவதை அடைய அவர்கள் எந்த ஒரு செயலையும் செய்யக்கூடியவர்களாக இருப்பர்.

முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் மற்றவர்கள் முன் தங்களை சிறப்பானவர்களாக காட்டவும், நிரூபிக்கவும், எப்பேற்பட்ட பொய்யையும் சொல்வார்கள். எனவே இந்த ராசிக்காரர்களை முழுமையாக நம்பிவிடாதீர்கள்.

மிதுனம்

மிதுனம் மிதுன ராசிக்காரர்களின் அறிகுறி 2 பக்கத்தைக் குறிக்கும். இதற்கேற்ப இந்த ராசிக்காரர்களுக்கு 2 பக்கம் இருக்கும்.

அதாவது ஒரே நேரத்தில் இந்த ராசிக்கார்களுக்கு இருவேறு குணாதிசயங்களைக் கொண்டிருப்பார்கள். இதனாலேயே பல சூழ்நிலைகளில் இந்த ராசிக்காரர்க்ள குழப்பத்தில் இருந்து, எந்த விஷயத்திற்கு முதலிடம் அளிப்பது என்று தெரியாமல் குழப்ப நிலையிலேயே இருப்பர்.

மிதுன ராசிக்காரர்கள் மனதளவில் நேர்மையற்றவர்கள் அல்ல. ஆனால் இவர்களது இரட்டை சுபாவம் தான் இவர்களை நேர்மையற்றவர்கள் போன்று காட்டுகிறது.

பொதுவாக இந்த ராசிக்காரர்கள் ஒரு விஷயத்தில் முடிவு எடுப்பதற்கு சற்று தாமதம் ஆகும். மேலும் இந்த ராசிக்காரர்கள் பொய் அதிகம் சொல்வார்கள். அதிலும் பிரச்சனை என்று வரும் போது தன்னைக் காத்துக் கொள்ள சற்றும் யோசிக்காமல் பொய் சொல்வார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் பொய்களை அள்ளி விடுவதில் வல்லவர்களாக கருதப்படுகிறார்கள். இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் நன்கு அலசி ஆராய்வதோடு, அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என விரும்புவர்.

இவர்கள் கூறும் பொய்களை வைத்து ஒரு பெரிய வலையே பின்னிவிடலாம். மேலும் இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களது மனதில் விளையாட விரும்புவதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் பகுப்பாய்வு கொண்டவர்கள். இதனால் இவர்களால் மற்றவர்களது பலவீனத்தை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.

ஆகவே இந்த ராசிக்காரர்களிடம் எதையும் அதிகம் கூற வேண்டாம். மேலும் இந்த ராசிக்காரர்கள் கூறும் பொய்யானது மற்றவர்களால் எளிதில் கண்டறியும் வகையில் இருக்காது. அந்த அளவில் அவர்கள் கச்சிதமாக பொய் கூறுவார்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் அதிகம் பொய் கூற மாட்டார்கள். இருப்பினும் தங்களுக்கு வேண்டியது கிடைப்பதற்கு அரிதாக பொய் கூறுவார்கள்.

இந்த ராசிக்காரர்கள் தங்களது சுதந்திரத்தை மிகவும் நேசிப்பவர்கள். இதற்கு இடையூறாக யார் இருந்தாலும், இவர்களுக்குப் பிடிக்காது.

இந்த ராசிக்காரர்களுக்கு நிலையாக இருப்பதையே விரும்புவர். இந்த ராசிக்காரர்களுக்கு தன்னைச் சுற்றி இருப்பவர்கள் மற்றும் சுற்றி இருக்கும் விஷயங்கள் பாதுகாப்பானதாக இருப்பது போல் இல்லாவிட்டால், அவர்களை விட்டு விலக பொய் கூறுவார்கள்.

கடகம்

நண்டு குறியைக் கொண்டவர்கள் கடக ராசிக்காரர்கள். இவர்கள் மனதளவில் மென்மையானவர்கள் ஆனால் வெளியில் கடினமானவர்கள் என்றும் கூறலாம்.

அல்லது இவர்கள் வெளியே விசுவாசமானவர்களைப் போன்று காணப்படுவர் ஆனால் உள்ளே ஏமாற்றும் எண்ணத்தைக் கொண்டிருப்பர் என்றும் கூறலாம்.

எதுவாக இருந்தாலும், இந்த ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வார்கள். இவர்கள் கூறும் பெரும்பாலான பொய்கள், மற்றவர்களால் தன் மனம் புண்படாமல் இருப்பதற்காக தான் இருக்குமே தவிர, ஏமாற்றுவதற்காக இருக்காது.
Previous Post Next Post