இந்த விரதத்தை தொடர்ந்து 62 வெள்ளிக்கிழமைகள் செய்தால் செல்வம் பெருகுமாம்..!

இந்த விரதத்தை தொடர்ந்து 62 வெள்ளிக்கிழமைகள் செய்து வர வேண்டும். இந்த விரதத்தால் கால பைரவரின் அருளாசி பெருமளவு கிடைக்கும். பல மடங்கு செல்வ வளம் உண்டாகும்.

வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் காலபைரவருக்கு நமது பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்;அவ்வாறு செய்யும் போது சந்தனாதித்தைலம், அத்தர், புனுகு, ஜவ்வாது,சிகப்பு அரளிமாலை அல்லது பூக்கள் போன்றவைகளை பூசாரியிடம் பூஜைக்குத் தர வேண்டும்.இவ்வாறு 62 வெள்ளிக்கிழமைகளுக்கு விரதம் இருந்து தொடர்ந்து வழிபாடு செய்து வர வேண்டும்.

இதில் இந்த விரத வழிபாட்டை 31 வெள்ளிக்கிழமைகள் செய்து முடித்தப்பின்னர்,குறைந்தது ஒரு ஏழைப்பெண்ணுக்கு தங்கத்தில் தாலி செய்து கொடுக்க வேண்டும்;

அதிகபட்சமாக 3 இன் மடங்குகளில்( 3,6,9,12,15) ஏழைப் பெண்களுக்கு அவர்களின் குல வழக்கப்படி தாலி செய்து தானம் செய்தால்,கால பைரவரின் அருளாசி பெருமளவு கிடைக்கும். பல மடங்கு செல்வ வளம் உண்டாகும்.
Previous Post Next Post