நேற்றிரவு அடையாளம் காணப்பட்ட 7 கொரோனா நோயாளிகள் தொடர்பான தகவல்

இலங்கையில் நேற்றிரவு புதிதாக அடையாளம் காணப்பட்ட 7 கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.இதற்கு முன்னர் கொரோனா தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட விமான நிலைய துப்பரவு பணியாளருடன் நெருக்கமாக இருந்தவர், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் தாதி, ஜா-எல சுதுவெல்ல பிரதேச நபர், மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மூவர் மற்றும் பூணானி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த இருவர் ஆகியோரே கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நபர்களில் இரண்டு பெண்களும் 5 ஆண்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 210ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 56 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post