முழு இலங்கையும் முடங்கப் போவதாக போலித் தகவல்கள்! பொலிஸார் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எதிர்வரும் நாட்களில் இலங்கை முழுவதும் மூடப்படவுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகம், அரச தகவல் திணைக்களம், இராணுவம் மற்றும் பொலிஸாரினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிக்கையை தவிர வேறு அறிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டாம் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இனங்களுக்கிடையில் இன பேதம் ஒன்றை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் தகவல்கள் தொடர்பிலும் பொலிஸாரினால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து வரும் ஒரு மாதத்திற்கு முழுமையாக இலங்கை முடக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post