இலங்கையில் இம்மாத இறுதிக்குள் கொரோனா அடங்கும்! வைத்திய சங்கம் அறிவிப்பு

"சுகாதாரத் தரப்பினர் வழங்கும் ஆலோசனைகளின்படி பொதுமக்கள் செயற்படுவார்களாயின், இம்மாத இறுதிக்குள் கொரோனாப் பரவலை முற்றாகத் தடுக்கலாம்.

அத்துடன் பிரதேச ரீதியில் தனிமைப்படுத்தல் நிலையங்களை உருவாக்குமாறு ஆலோசனையும் அரசுக்கு ழங்கியுள்ளோம்."- இவ்வாறு இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும்போது, அதற்கான வசதிகள் சில வீடுகளில் இல்லாதுள்ளதால், அந்த வீடுகளிலுள்ள ஏனையோருக்கும் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்று இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் சுக்காட்டியுள்ளது.

பிரதேச ரீதியில் தனிமைப்படுத்தல் நிலையங்களை உருவாக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ள அந்தச் சங்கம், இதனூடாக, வீடுகளிலுள்ள ஏனையவர்களுக்கும் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

சுகாதாரத் தரப்பினர் வழங்கும் ஆலோசனைகளின்படி பொதுமக்கள் செயற்படுவார்களாயின், இம்மாத இறுதிக்குள் கொரோனாப் பரவலை முற்றாகத் தடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post