இலங்கையில் பண பரிமாற்ற சேவைகளை வீடுவீடாக வழங்க நடவடிக்கை!

எல்லைத்தாண்டிய நாணய பண இயக்கம் மற்றும் கொடுப்பனவுகளில் முன்னணியில உள்ள வெஸ்டன் யூனியன் மற்றும் எம்.எம்.பி.எல் மாஸ்டர் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் பண பரிமாற்றங்களை வீடுவீடாக மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளன.

இன்று இது தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் உலகலாவிய ரீதியில் இருக்கும் தமது உறவுகள் அனுப்பும் பணத்தை இலங்கையில் உள்ளவர்கள் தமது வீடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.

கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட கட்டுப்பாடுகளை கருத்திற்கொண்டே இந்த ஒழுங்கு மேற்கொள்ளப்படுவதாக வெஸ்டன் யூனியன் அறிவித்துள்ளது.

இந்த பணபரிமாற்றங்களின் போது வெஸ்டன் யூனியனும், எம்.எம்.பி.எல்லும் இணைந்து செயற்படவுள்ளன.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணிவரை இந்த சேவைகள் இடம்பெறும் என்று இரண்டு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

இதன்படி பணம் செலுத்துநரிடம் இருந்து பணம் பெறுவோருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததும் இலங்கையில் பணத்தை பெறவுள்ளவர்கள் எம்.எம்.பி.எல் தொலைபேசி இலக்கங்களான 011552999 அல்லது 0115529997 என்பவற்றுடன் தொடர்புகொள்ளலாம்.

இதன்பின்னர் இந்த நிறுவனங்களின் முகவர்கள் பணம் பெறுவோரின் விபரங்களை உறுதிப்படுத்தி அவர்களுக்குரிய பணத்தை கிடைக்கச்செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று இலங்கை உட்பட்ட நாடுகளில் பரவியதை அடுத்து இந்த கொடுப்பனவு முறையில் தடைகள் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post