
மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை தளர்த்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்தப் பகுதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 4ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் அதனை தளர்த்துவது குறித்து நடைமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

புதிய நடைமுறை குறித்து அடுத்து வரும் சில தினங்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றின் அபாய வலயமாக கருதப்படும் மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தை தவிர்த்து ஏனைய மாவட்டங்களுக்கு நாளை காலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் இரவு எட்டு மணிக்கு அமுல்படுத்தப்படும்.
ஊரடங்கு சட்டத்தை தளர்த்தும் பிரதேசங்களில் மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கு விசேட நடைமுறை ஜனாதிபதி ஊடக பிரிவினால் அறிவிக்கப்பட்டது.