கொழும்பின் பிரதான பகுதியொன்று முழுமையாக முடக்கம்

கொழும்பு பிரதான பகுதிகளில் ஒன்றான கிராண்ட்பாஸின் ஒரு பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராண்ட்பாஸின் நாகலகம மாவத்தை முழுமையாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று அங்குள்ள சிலரை தனிமைப்படுத்திய பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜா ஏல பகுதியில் கண்டறியப்பட்ட கொரோனோ தொற்றாளியுடன் தொடர்பை கொண்டிருந்தனர் என்ற அடிப்படையிலேயே நேற்று இந்த பகுதியில் இருந்து 100 பேர் வரை சம்பூர் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
Previous Post Next Post