இலங்கையில் மேலும் உயர்வடைந்த கொரோனா நோயாளார் எண்ணிக்கை

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் இன்று இரவு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 217ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 56 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 154 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Previous Post Next Post