கொரோனா தொற்று! யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றும் ஒருவர் லண்டனில் பலி

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மயிலிட்டியை சேர்ந்த 67 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னையா அமிர்தலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

குறித்த நபர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், லண்டனில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி நேற்று திங்கட்கிழமை அதிகாலை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் சுகயீனம் அடைந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர்களது குடும்ப உறுப்பினர்களும் 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு வைத்தியசாலை தரப்பினர் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், அவரது உடல்நிலை மிக மோசமானதுடன், உடல் அவையங்கள் செயலிழந்த நிலையில், நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Previous Post Next Post