தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தின்படி வீட்டைவிட்டு வெளியில் சென்று வர அனுமதி!

தேசிய அடையாள அட்டை எண்ணின் அடிப்படையில் அத்தியாவசிய நோக்கங்களுக்காக நபர்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அதன்படி, திங்கள் கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் கடைசி எண்ணின் அடிப்படையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் சென்று வர அனுமதிக்கப்படுவார்கள்.திங்கள் கிழமைகளில் அடையாள அட்டையின் கடைசி இலக்கம் 1 அல்லது 2 என்ற எண்ணை கொண்டுள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

செவ்வாய்: 3 அல்லது 4

புதன்கிழமை: 5 அல்லது 6

வியாழக்கிழமை: 7 அல்லது 8

வெள்ளிக்கிழமை: 9 அல்லது 0

ஒருவர் மட்டும் வீட்டை விட்டு வெளியேறி அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு மற்றும் மருந்துகள் போன்ற பொருட்களை வாங்க வேண்டும். இதுபோன்ற பொருட்களை வாங்க, ஒருவர் உள்ளூர் சந்தைக்குச் சென்று அருகிலுள்ள கடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அறிவிப்பு மேலும் கூறுகிறது.
Previous Post Next Post