சார்வரி ஆண்டில் கிரக பலன்கள், கிரக பெயர்ச்சி எப்படி இருக்க போகுது ?

சார்வரி தமிழ் புத்தாண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இன்று ஏப்ரல் 13 ஆம் திகதி 2020, பங்குனி 31 ஆம் நாள் திங்கட்கிழமை இரவு 8.23 மணிக்கு துலா லக்கினம் தனுசு ராசியில் பிறக்கிறது.

இதேவேளை, வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று இரவு 7.26 மணிக்கு பிறக்கின்றது.

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்நிலையில் சார்வரி ஆண்டில் கிரக பலன்கள், கிரக பெயர்ச்சி எப்படி இருக்க போகுது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

நவகிரகங்களின் நிலை
சனி -ராஜா
சூரியன் - மந்திரி
சனி - சேனாதிபதி
புதன் - ஸஸ்யாதிபதி
சந்திரன்- தான்யாதிபதி
சனி - அர்க்காதிபதி
சனி - மேகாதிபதி
சுக்கிரன் - இராசாதிபதி
புதன்- நீரஸாதிபதி
சார்வரி கிரக பெயர்ச்சி
குரு தற்போது அதிசாரம் அடைந்து மகர ராசியில் இருக்கும் நிலையில், ஜூன் 8ம் தேதி (ஆனி 24) வக்கிரம் அடைந்து தன் சொந்த வீடான தனுசு ராசிக்கு திரும்புவார். 2020 நவம்பர் 15ம் தேதி இரவு 9.36 மணிக்கு குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைவார். அதன் பின்னர் 2021 ஏப்ரல் 6ம் தேதி (பங்குனி 23) கும்ப ராசிக்கு அதிசார பெயர்ச்சி அடைவார்.
வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் மகர ராசிக்கு மார்கழி மாதம் 11 (2020 டிசம்பர் 26) அன்று பெயர்ச்சி அடைவார்.
2020 செப்டம்பர் 1ம் தேதி (ஆவணி 16) ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது. ராகு பகவான் ரிஷப ராசிக்கும், கேது விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி அடைய உள்ளனர்.
சார்வரி வருடத்தில் வரும் கிரகணங்கள்
ஜூன் 5 அன்று ஒரு பௌர்ணமி தினத்தில் சந்திர கிரகணம்.
ஜூன் 21 அன்று ஒரு வருடாந்திர சூரிய கிரகணம்.
ஜூலை 5 அன்று ஒரு பௌர்ணமி தினத்தில் சந்திர கிரகணம்.
நவம்பர் 30 அன்று ஒரு தெளிவற்ற சந்திர கிரகணம்
டிசம்பர் 14 அன்று சூரிய கிரகணம்.
Previous Post Next Post