திருநீறை இப்படி கொடுக்கக் கூடாது! இப்படி வாங்கவும் கூடாது! மகா பாவத்தை சேர்த்துவிடும்.

சைவ சமயத்தின் அடையாளச் சின்னமாக இருப்பது திருநீறு என்று சொல்லப்படும் விபூதி. இந்த திருநீற்றை எப்படி முறையாக அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும், பெறுபவர்கள் அதை முறையாக எப்படிப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும், சைவம் வைணவம் என்ற பேதமை பார்க்கும் பழக்கம் எல்லாம் சில மனிதர்களுக்கு தான் இருக்கிறது. இந்த பேதம் எல்லாம் கடவுள்களுக்கு இல்லை என்பதையும் உணர்த்துவதற்காக தான் இந்த பதிவு.திருநீற்றை அடுத்தவர்களுக்கு கொடுக்கும்போது, ரிஷப முத்திரையை நம் கையில் வைத்துக் கொண்டு தான் கொடுக்க வேண்டும். அதாவது கட்டைவிரல் நடுவிரல் மோதிரவிரல் இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து கொண்டு, சுண்டு விரலையும், ஆள் காட்டி விரலையும் தவிர்த்துவிட்டு வைப்பதுதான் ரிஷப முத்திரை. கீழே கொடுக்கப்பட்டுள்ளன படத்தில் இருக்கும் சின்னத்தை கையில் வைத்து, குறிப்பிட்ட அந்த மூன்று விரலையும் சேர்த்து, திருநீற்றை எடுத்து கொடுப்பது தான் சரியான முறை.இதை விடுத்து ஐந்து விரல்களில் மொத்தமாக எடுத்துக் கொடுத்தால் அது திருநீறு அல்ல. அதற்குப் பெயர் சாம்பல் என்பதை குறிக்கும். இந்த ரிஷப முத்திரையை நம் கையில் வைக்கும்போது ஒரு உருவம் தெரியும். குறிப்பிட்டு சொல்லப்போனால் நிழலில் பார்த்தால் இன்னும் அந்த உருவம் நமக்கு நன்றாகப் புலப்படும். அதாவது ஒரு மாடு வடிவம் இந்த முத்திரையில் மறைந்துள்ளது. நந்திதேவரின் கையாலேயே திருநீற்றைப் பெறுவதாக அர்த்தத்தை குறிப்பதுதான் இந்த ரிஷப முத்திரை. ஆகையால் நீங்கள் திருநீற்றை அடுத்தவர்களுக்கு கொடுப்பதாக இருந்தால்,இனி ரிஷப முத்திரையில் கொடுக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக திருநீறை வாங்குபவர்கள் எப்போதுமே ஒரு கையை நீட்டி வாங்கக் கூடாது. வலது கையால் திருநீறு வாங்கும்போது, இடது கை கட்டாயம், வலது கைக்கு கீழே இருக்க வேண்டும். திருநீறு கொடுப்பவரது தலை மேலோங்கி இருக்கவேண்டும். திருநீறை வாங்குபவர் தலைகுனிந்து, பணிவோடு வாங்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எக்காரணத்தைக் கொண்டும் வாங்கிய திருநீறில் ஒரு துளிகூட கீழே சிந்தக் கூடாது. திருநீற்றை நம்முடைய கால்கலால் மிதித்தால், நமக்கு பெரிய பாவம் வந்து சேர்ந்துவிடும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.இந்தத் திருநீரை தினம்தோறும் நெற்றியில் வைத்துக் கொள்பவர்களுக்கு மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்ற ஒரு குறிப்பும் நம்முடைய சாஸ்திரத்தில் உள்ளது. திருநீறை நெற்றியில் வைத்துக்கொண்டால் மகாலட்சுமி கடாட்சம் எப்படி வரும்? மகாலட்சுமி விஷ்ணுவின் மனைவி. திருநீறு வைத்துக் கொள்பவர்கள் சிவபக்தர்களாயிற்றே! என்ற இந்ந குழப்பம் இப்போது நம்மில் பல பேருக்கு எழுந்திருக்கும். இதை இந்த பதிவின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம்.

அதாவது பசுமாடு மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. அந்த பசு மாட்டின் சாணத்திலிருந்து முறையாக பதப்படுத்தி பெறப்பட்டது தான் திருநீறு. அப்போது அந்த திறுநீரில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பதுதானே அர்த்தம். இந்த ஒரு விஷயமே போதுமே ஹரியும் ஹரனும் ஒன்றுதான் என்பதை உணர்த்துவதற்கு! ஹரியும் ஹரனும் ஒன்று என்பதை நம் முன்னோர்கள் நமக்காக எப்போ வலியுறுத்தி விட்டு சென்றுள்ளார்கள்.இப்படியிருக்க, மனிதர்களான நாம் தான் பேதத்தை பார்க்கிறோமே தவிர, அந்தக் கடவுள்கள் என்றுமே ஒன்றாகத்தான் இருக்கின்றார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக தான் இந்த எடுத்துக்காட்டு. ஆகையால், இவர்கள் தான் திருநீற்றை பூசிக்கொள்ளவேண்டும். இவர்கள் பூசிக்கொள்ளக் கூடாது என்ற எந்த கட்டாயமும் இல்லை. தினம்தோறும் எல்லோரும், எந்த சமயத்திலும் திருநீறை நெற்றியில் பூசிக் கொள்ளலாம். திருநீறை நெற்றியில் வைத்துக் கொண்டிருப்பவர்கள் அருகில் எந்த ஒரு கெட்ட சக்தியும் நெருங்க முடியாது என்ற கூற்றினை முன்வைத்து, இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.
Previous Post Next Post