இரவில் இலவசமாக வழங்கப்பட்ட கோதுமை மாவு... வாங்கிச்சென்ற ஏழைகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்! பிரபல நடிகர் சத்தமின்றி செய்த உதவி

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பல கோடி ஏழை எளிய மக்கள் இந்தியாவில் வறுமையில் வாடி வருவதாகவும் அவர்களுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரமுகர்கள் பலரும் கோடிக்கணக்கில் நிதி உதவியும் பொருளுதவியும் கொடுத்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.இந்த நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் அவர்கள் கொடுத்த பொருள் உதவி ஏழை மக்களுக்கு அதிர்ஷ்டத்தை அளித்துள்ளது.

டெல்லியில் ஏழை மக்கள் வசிக்கின்ற பகுதிக்கு கடந்த வியாழன் இரவில், ஒரு கிலோ கோதுமை பாக்கெட் மட்டும் நிறைந்திருந்த லொரி வந்துள்ளது.

அதில் இருந்த மாவு பாக்கெட்டை இலவசமாக தருகின்றோம் என்று அதிலிருந்த சகோதரர்கள் கூறியுள்ளனர். ஒரு கிலோ மட்டும் தானே என்று கொஞ்சம் வசதியானவர்கள் யாரும் வந்து அந்த வரிசையில் நிற்கவில்லை.

ஆனால் பசியில் இருந்த ஏழைகள் ஒருநேரம் சாப்பாட்டிற்கு உதவுமே என்று வரிசையில் நின்று வாங்கிச் சென்றுள்ளனர். இரவு நேரம் என்பதால் வாங்கி சென்று வீட்டில் வைத்துவிட்டு அனைவரும் உறங்கிவிட்டனர்.மறுநாள் காலையில் சமைப்பதற்கு மாவு பாக்கெட்டை பிரிந்த போது ஆச்சரியம் காத்திருந்துள்ளது. ஆம் குறித்த பாக்கெட்டில் ரூபாய் 15 ஆயிரம் பணம் இருந்துள்ளதைக் கண்டு உச்சக்கட்ட மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குறித்த மாவு பாக்கெட்டில் பணம் இருந்தது அதனை விநியோகித்த சகோதரர்களுக்கு கூட தெரியாதாம். ஏழை மக்களுக்கு தான் செய்யும் உதவி சென்றடைய வேண்டும் என்று நடிகர் அமீர்கான் செய்துள்ள யோசனை அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
Previous Post Next Post